திருப்பூர்

முதலிபாளையத்தில் வட மாநில தொழிலாளர்கள் சாலை மறியல்

DIN


முதலிபாளையம் சிட்கோ தொழில்பேட்டை வளாகத்தில் வடமாநிலத் தொழிலாளரைத் தாக்கியவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கக் கோரி வட மாநிலத் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனர். 
திருப்பூர்- ஊத்துக்குளி சாலை, முதலிபாளையம் சிட்கோ தொழில்பேட்டையில் செவ்வாய்க்கிழமை தமிழகத் தொழிலாளர்களுக்கும், வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், வடமாநிலத் தொழிலாளி லட்சுமணனை சிலர் தாக்கியனர். இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 
இதையடுத்து, தங்களைத் தாக்கியவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கக் கோரி திடீர் சாலை மறியலில் வட மாநிலத் தொழிலாளர்கள் புதன்கிழமை காலை ஈடுபட்டனர்.  
அங்கு வந்த ஊத்துக்குளி போலீஸார், வட மாநிலத் தொழிலாளர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT