திருப்பூர்

இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு  ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

DIN

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி காங்கயத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் எல்லப்பாளையம்புதூர் ஊராட்சி, புள்ளக்காளிபாளையம் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம், அப்பகுதி மக்கள் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது : 
காங்கயம் தாலுகா, எல்லப்பாளையம்புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 20 குடும்பங்களைச் சேர்ந்தோர் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மனு கொடுத்து வருகிறோம்.
இந்நிலையில், காங்கயம் தாலுகா, வட சின்னாரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள நிலங்களை எங்களுக்கு வழங்க வாய்ப்புள்ளதாக காங்கயம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் எங்களுக்கு உறுதியளித்திருந்தார். அதற்காக எங்களின் வருமானச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தனி வட்டாட்சியரிடம் அளித்துள்ளோம்.
 குடியிருக்க சொந்த வீடோ, நிலமோ இல்லாத எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT