திருப்பூர்

சாலையில் கிடந்த ரூ. 10 ஆயிரம்: போலீஸில் ஒப்படைத்த வேன் ஓட்டுநர்

DIN

திருப்பூர், குமார் நகரில் சாலையில் ரூ.10 ஆயிரம் பணம், ஏடிஎம் அட்டையுடன் கிடந்த மணி பர்ஸை காவல்துறையினரிடம் வேன் ஓட்டுநர் ஒப்படைத்தார். 
திருப்பூர், சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் மனோகரன் (56). இவர் அவிநாசி சாலை, குமார் நகர் சந்திப்பு அருகே  திங்கள்கிழமை சென்றபோது மணி பர்ஸ் ஒன்று கீழே கிடந்துள்ளது. அதை மனோகரன் எடுத்துப் பார்த்தபோது அதில் ரூ.10 ஆயிரம் மற்றும் ஏடிஎம் அட்டைகள் இருந்துள்ளன.  இதையடுத்து அந்த மணி பர்ஸை அங்கிருந்த போக்குவரத்துக் காவலரிடம் மனோகரன் ஒப்படைத்தார். 
இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் விசாரித்ததில் அங்கித் சௌத்ரி (20) என்பவர் அந்த பர்ஸை தவற விட்டது தெரிந்தது. இதையடுத்து, அங்கித் சௌத்ரிக்கு தகவல் தெரிவித்த காவல் துறையினர், மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.பிரபாகரன் (தலைமையிடம்) முன்னிலையில் அவரிடம் ஒப்படைத்தனர்.  மேலும், வேன் ஓட்டுநர் மனோகரனின் நேர்மையை காவல் துறையினர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT