திருப்பூர்

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலைகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

DIN

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 இது குறித்து அச்சங்கத்தின் செயலர் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
 சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட தொழில்களுக்கு இந்தியாவில் சிவப்பு கம்பளம் விரித்து, உலகத்தின் குப்பைத் தொட்டியாக நம் நாட்டை மாற்றி வருவது வேதனைக்குரியது.
 கிராமங்களில் இருந்து நகரங்களுக்குக் கொண்டு செல்லும் விவசாய விளைபொருள்கள் கம்போஸ்ட் உரமாக விளைநிலங்களுக்குத் திரும்பி வரவேண்டும். எரிக்கவோ, ஆறுகளில் கொட்டவோ, கடலில் கொட்டவோ கூடாது.  
 மாசு ஏற்படுத்தும் ஆலைகளை தடைசெய்ய வேண்டும். பிளாஸ்டிக் தடைபோல, நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கும் படிப்படியாகத் தடை விதித்து ஒருகட்டத்தில் நிலத்தடி நீர் எடுப்பதற்கு முற்றிலுமாக தடைவிதிக்க வேணடும். தவறினால் நாடு காலப்போக்கில் பாலைவனமாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT