திருப்பூர்

மண்வளம் மேம்பட விவசாயிகள் கோடை உழவு செய்து கொள்ளலாம்

DIN

விவசாயிகள் கோடை உழவு செய்து மண்வளத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. 
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அனந்தகுமார் கூறியதாவது: 
 குண்டடம் வட்டாரத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மழையின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி, விவசாயிகள் தங்களது நிலத்தை உழவு செய்து பயன்பெற வேண்டும். 
 கோடைகால உழவு செய்வதன் மூலம் மண்ணின் வளத்தை மேம்படுத்தி விதை அல்லது பயிர் நன்கு வளர ஏற்ற சூழ்நிலையை உருவாக்கலாம். மேலும், மண்ணில் காற்று பரிமாற்றம் அதிகரித்து பயிர், விதைகள் மண்ணில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் எடுத்துக் கொள்ள உதவுவதோடு, மண்ணின் இறுக்கம் குறைக்கப்பட்டு பயிரின் வேர்கள் நன்கு வளர்ச்சி பெற உதவுகிறது.
 தற்போது செய்யப்படும் உழவின் மூலம் பெரிய மண் கட்டிகள் சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து நாளடைவில் வெப்பம், குளிரினால் நொறுங்கி தூளாகிவிடும். இதனால் மண்ணின் கட்டமைப்பு மேம்படுவதோடு பல ஆண்டுகளாக நிலத்தில் இருக்கும் கோரை, அருகம்புல் உள்ளிட்ட களைகளின் வேர் கிளங்குகள் மேலே கொண்டு வரப்பட்டு வெயிலில் காய்ந்து விடும்.
மேலும் பயிர்களை தாக்கி அழிக்கும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் மண்ணின் அடியிலிருந்து மேல்பரப்புக்கு கொண்டுவரப்பட்டு வெயில் மற்றும் பறவைகளால் அழிக்கப்படும். 
 விவசாயிகள் தங்களது நிலத்தில் இட்ட இயற்கை, செயற்களை உரங்கள் மண்ணுடன் கலந்து பயிர்களுக்கு எளிதாக கிடைக்கும். கோடை உழவு செய்யும்போது நிலத்தின் சரிவுக்கு குறுக்காக உழுவதன் மூலம் நிலத்தில் அதிகளவு மழை நீரைச் சேமிக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT