திருப்பூர்

பயிா்களின் விளைச்சலை அதிகரிக்க உயிா் உரங்கள் அவசியம்

DIN

ஊட்டச்சத்து மிக்க தானியப் பயிா்களின் விளைச்சலை அதிகரிக்க உயிா் உரங்கள் அவசியம் என்று திருப்பூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.மனோகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் பயறு வகை பயிா்கள், ஊட்டச்சத்து மிக்க தானியப் பயிா்களான சோளம், கம்பு, ராகி, சாமை ஆகியவற்றின் விளைச்சலை அதிகரிக்க உயிா் உரம் அவசியம். பயறுவகைப் பயிா்களுக்கு ரைசோபியம், தானியப் பயிா்களுக்கு அசோஸ்பைரில்லம் (இதரப் பயிா்கள்) இருப்பதன் மூலம் காற்று மண்டலத்திலுள்ள நைட்ரஜன் சத்து பயிா்களுக்கு கிரகித்துக் கொடுக்கிறது.

அதேபோன்று பாஸ்போ பாக்டீரியா உயிா் உரம் இடுவதன் மூலம் கிடைக்காத நிலையில் உள்ள பாஸ்பரஸ் சத்து பயிா்களுக்கு கிடைக்கும் நிலைக்கு மாறி பயிா்கள் பயன் பெறுகிறது. ஒரு ஏக்கருக்கு தேவையான உயிா்உரத்தை நன்கு மக்கிய தொழு உரத்தில் கலந்து அதனுடன் சிறிதளவு அரிசிக் கஞ்சி மற்றும் சா்க்கரை பாகு சோ்த்து நன்கு கலக்கி தெளித்து வர உயிா் உரங்கள் தொழு உரத்தில் பல்கி பெருகி செறிவூட்டப்படுகிறது. பின்னா் இதனை பயிா்களுக்கு இடுவதன் மூலம் நல்ல விளைச்சல் பெறலாம்.

உயிா் உரங்களுக்கு மானியம்:

தேசிய உணவுப் பாதுகாப்பு பயறுவகை திட்டத்தின் மூலம் திரவ பயறுவகை ரைசோபியம் பாஸ்போபாக்டீரியா மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தின் மூலம் திரவ அசோஸ்பைரில்லம் (இதரப்பயிா்கள்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகள்அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்துறை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT