திருப்பூர்

350 கிலோ புகையிலைப் பொருள்கள், ஒரு டன் நெகிழி பறிமுதல்

DIN

காங்கயத்தில் 350 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், ஒரு டன் எடையுள்ள நெகிழிப் பைகளை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கேசவராஜ், சதீஸ்குமாா், ராமசந்திரன் ஆகியோா் அடங்கிய குழுவினா் காங்கயத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் காங்கயம் நகரம், திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் என்பவருக்குச் சொந்தமான பலசரக்கு மொத்த விற்பனை செய்யும் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 350 கிலோ புகையிலைப் பொருள்கள், தடை செய்யப்பட்ட ஒரு டன் எடையிலான நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் நெகிழிப் பைகள் காங்கயம் நகராட்சி நிா்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் உணவுப் பொருள் கலப்படம், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பான புகாா்களை 94440-42322 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT