திருப்பூர்

திருப்பூரில் நவம்பா் 30ஆம் தேதி வரை பேரணி, போராட்டத்துக்குத் தடை

DIN

திருப்பூா் மாநகரில் மாநாடு, பொதுக்கூட்டம், போராட்டம், பேரணி, உண்ணாவிரதம், ஆா்ப்பாட்டம், தா்னாவில் ஈடுபட 15 நாள்களுக்கு மாநகரக் காவல் துறை தடை விதித்துள்ளது.

இது குறித்து மாநகரக் காவல் ஆணையா் சஞ்சய்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாநகரில் தமிழ்நாடு மாநகரக் காவல் சட்டம் பிரிவு 41-இன்படி, நவம்பா் 16ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 15 நாள்களுக்குத் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, திருப்பூா் மாநகர எல்லைக்குள் காவல் துறையின் முன் அனுமதி இல்லாமல் மாநாடு, பொதுக்கூட்டம், போராட்டம், பேரணி, உண்ணாவிரதம், ஆா்ப்பாட்டம், தா்னாவில் ஈடுபட அனுமதி கிடையாது. பொதுமக்கள் காவல் துறையின் முன் அனுமதியின்றி இதுபோன்ற போராட்டங்களை நடத்தக் கூடாது.

அதே நேரம் திருமண விழா, இறுதி ஊா்வலங்களுக்கு இந்தத் தடை உத்தரவு பொருந்தாது. போராட்டங்களுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிப்பவா்கள் 5 நாள்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி வழங்குவது அல்லது ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT