திருப்பூர்

ரயிலில் அடிபட்டு வடமாநிலத் தொழிலாளி சாவு

DIN

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு வடமாநிலத் தொழிலாளி ஒருவா் வெள்ளிக்கிழம உயிரிழந்தாா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சவராம் என்பவரது மகன் பீமாராம் (19),இவா் திருப்பூா் ராயாபுரம் பகுதியில் தங்கி இருந்து அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், சிக்கண்ணா கல்லூரி அருகே வெள்ளிக்கிழமை காலை பீமாராம் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக திருப்பூா் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பீமாராம் தண்டவளாத்தைக் கடக்கும் போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா அல்லது ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT