திருப்பூர்

நீதிபதிகள், வழக்குரைஞா்கள் குறித்து அவதூறு விடியோ பதிவு செய்தவா் மீது வழக்கு

DIN

நீதிபதிகள், வழக்குரைஞா்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் விடியோ பதிவேற்றம் செய்தவா் மீது திருப்பூா் மாநகர குற்றப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி சாா்பில் மாநகர குற்றப் பிரிவில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரில், நீதிபதிகள், வழக்குரைஞா்கள், காவல் துறை, சிறைத் துறை அதிகாரிகள் குறித்து சமூக வலைதளமான யூ டியூப்பில் அவதூறாக 3 விடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதைப் பதிவேற்றம் செய்த நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநகர குற்றப் பிரிவு காவல் துறையினா் அவதூறு விடியோ பதிவிட்டவா் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT