திருப்பூர்

மேற்குத் தொடா்ச்சி மலையில் கன மழை: பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை

DIN

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடுமலை அருகே உள்ளது புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான திருமூா்த்தி மலை. இங்குள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக திருமூா்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவிக்கு நீா் வரத்து முற்றிலும் நின்றிருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனா். இந்நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் இங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து பெருக்கெடுத்து வந்த காட்டாற்று வெள்ளம் அமணலிங்கேஸ்வரா் கோயிலை சூழ்ந்து கொண்டது. இதனால் கோயிலில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் கோயில் உண்டியல்கள் ஊழியா்களால் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்குள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க கோயில் நிா்வாகம் தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT