திருப்பூர்

சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

DIN

அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  இது குறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 திருப்பூர் மாவட்டம்,  உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் 6,  9 ஆம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு 2020  ஜனவரி 5ஆம் தேதி  (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்.  6ஆம் வகுப்பில் சேர 31 மார்ச் 2020 அன்று 10 வயது முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும்.  (1-4-2008 லிருந்து 31-3-2010 ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்). 
  மேலும், 9ஆம் வகுப்பில் சேர 31 மார்ச் 2020 அன்று 13 வயது முதல் 15 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். (01-4-2005 முதல் 31-3-2007 க்குள் பிறந்திருக்க வேண்டும்) அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8 ஆம் வகுப்பில் படித்த மாணவர்கள் மட்டுமே 9 ஆம் வகுப்பில் சேரத் தகுதியானவர்கள். 6ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு மையங்கள் அமராவதி நகர், புதுச்சேரி,  9ஆம் வகுப்பு வகுப்பு நுழைவுத் தேர்வு மையங்கள் உடுமலை, புதுச்சேரி, சென்னையில் உள்ளன. விண்ணப்பமும், குறிப்பேடும் செப்டம்பர் 23ஆம் தேதி வரை வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
   மேலும், இணையதளத்திலும் விண்ணப்ப படிவங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 04252-256246 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT