திருப்பூர்

சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

DIN


காங்கயம், சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் 7 நாள் சிறப்பு முகாம் சிவன்மலை அருகே உள்ள ராமபட்டினம் கிராமத்தில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
 நலமான இளைஞர்-வளமான பாரதம் எனும் நோக்கத்தை பிரதானமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இம்முகாமினை காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகுடேஸ்வரி துவக்கி வைத்தார். இதில் பெரியார் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் ஆதலையூர் சூர்யகுமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
  முகாமில் ராமபட்டினம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள முள்புதர்களை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் ஏ.கோபால், தாளாளர் சி.பழனிசாமி, பொருளாளர் மோகனசுந்தரம், பள்ளியின் இயக்குநர் பி.சாவித்திரி, பள்ளி முதல்வர் சுப்பிரமணி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பாபு, உதவித் திட்ட அலுவலர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT