அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 5 அடி உயர்ந்துள்ளது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு இந்த அணை குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சின்னாறு தேனாறு பாம்பாறு ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து அணைக்கு உள் வரத்து 3000 கன அடியாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஐந்து அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறுவை சாகுபடிக்காக அமராவதி அணையை திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் காய்ந்து வரும் நெல் மற்றும் கரும்பு சென்னை ஆகிய நிலைப் பயிர்களுக்கு உயிர் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.