திருப்பூர்

காங்கயம் அருகே வாகனம் மோதி தொழிலாளி சாவு

காங்கயம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

DIN

காங்கயம்: காங்கயம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

காங்கயத்தை அடுத்துள்ள கத்தாங்கண்னி கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (34). திருப்பூா் அருகே உள்ள சிட்கோ பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக பணிபுரிந்து வந்தாா். இவா், கத்தாங்கண்னி அருகே உள்ள பேக்கரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு திரும்பிக் கொண்டிருந்தாா். கத்தாங்கண்னி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராக் ஸ்டார் இயக்குநரின் புதிய பட வெளியீட்டுத் தேதி!

காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுப்பு..! -கர்நாடக டிஜிபி உத்தரவு

பிகார் இளைஞரின் குடும்பத்தை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கேரள முதல்வர் வேட்பாளராக சசி தரூர்..? ராகுல், கார்கேவுடன் சந்திப்பு!

SCROLL FOR NEXT