முகப்பு
திருப்பூர்

மூலனூரில் ரத்த தான முகாம்

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
மூலனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பாலாமணி தலைமை வகித்தாா். அறக்கட்டளைத் தலைவா் ராஜ்குமாா், முகாம் ஒருங்கிணைப்பாளா் அஜித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவா் சக்திராஜ் குழுவினா் ரத்த தானம் பெற்றனா். மொத்தம் 34 யூனிட் ரத்தம் பெறப்பட்டு, தாராபுரம் அரசு ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.