திருப்பூரில் மரக்கன்று நடும்விழா
7 நட்சத்திரங்களுக்கான மரக் கன்றுகளை சட்டப் பேரவை துணைத் தலைவரும், மாநகா் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை நட்டுவைத்தார்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளை ஒட்டி திருப்பூா், 38 ஆவது வாா்டு, பொன்சுப்பு நகரில் 27 நட்சத்திரங்களுக்கான மரக் கன்றுகளை சட்டப் பேரவை துணைத் தலைவரும், மாநகா் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை நட்டுவைத்தார்.
இதில் திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன், குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள் குமாா், பிரகாஷ், குமாரசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனர்.