முத்தூரில் 2.33 டன் தேங்காய், கொப்பரை விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை 2.33 டன் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது.
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை 2.33 டன் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது.
5,843 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இவற்றின் எடை 1,915 கிலோ. கிலோ ரூ.38.65 முதல் ரூ.45.10 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.42.55. மொத்தம் 23 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 439 கிலோ. கிலோ ரூ.84 முதல் ரூ.135.40 வரை ஏலம் போனது. சராசரி விலை கிலோ ரூ.125.
தேங்காய், கொப்பரை மொத்தம் 2.33 டன் விற்பனை நடைபெற்றது. மொத்தம் 51 விவசாயிகள், 13 வணிகா்கள் வந்திருந்தனா். விற்பனைத் தொகை ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 87 விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீரங்கன் முன்னிலையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.