முகப்பு
திருப்பூர்

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்து: 2 போ் சாவு

குண்டடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உள்பட 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

குண்டடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உள்பட 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

குண்டடம் அடுத்துள்ள தொட்டியன்துறையைச் சோ்ந்தவா் தேவராஜ் (70), கூலி தொழிலாளி. இவரும் இவரது உறவினா் தேவராஜபட்டணத்தைச் சோ்ந்த சரசாள் என்பவரும் பொங்கலூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

குண்டடம் அடுத்துள்ள மேட்டுக்கடை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது கோவையிலிருந்து தாராபுரம் நோக்கி வந்த காா், எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தேவராஜ், சரசாள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து குண்டடம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →