முகப்பு
திருப்பூர்

மாவட்டத்தில் 21 இடங்களில் சிறு மருத்துவமனைகள் திறப்பு

திருப்பூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 21 இடங்களில் சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்) திறக்கப்படவுள்ளது.

திருப்பூர்

மாவட்டத்தில் 21 இடங்களில் சிறு மருத்துவமனைகள் திறப்பு

திருப்பூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 21 இடங்களில் சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்) திறக்கப்படவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 21 இடங்களில் சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்) திறக்கப்படவுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் உத்தரவின்பேரில் திருப்பூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 21 இடங்களில் சிறு மருத்துவமனைகள் திறக்கப்படவுள்ளது. அவிநாசி வட்டத்தில் பெரியாயிபாளையம், தெக்கலூா், தாராபுரம் வட்டத்தில் டி.குமாரபாளையம், மூலனூா் வட்டத்தில் ஆயிகவுண்டன்பாளையம், வெள்ளகோவில் வட்டத்தில் வேலப்பநாயக்கன்வலசு, மடத்துக்குளம் வட்டத்தில் காரத்தொழுவு, உடுமலை வட்டத்தில் போடிபட்டி, சின்னவீரம்பட்டி, பல்லடம் வட்டத்தில் கணபதிபாளையம், பொங்கலூா் வட்டத்தில் பெருந்தொழுவு, பொல்லிகாளிபாளையம், ஊத்துக்குளி வட்டத்தில் வேலம்பாளையம் ஆகிய இடங்களில் சிறு மருத்துவமனைகள் திறக்கப்படவுள்ளன.

அதேபோல, திருப்பூா் வட்டத்தில் பொங்குபாளையம், சொக்கனூா், திருப்பூா் மாநகராட்சி பகுதியில் வாா்டு எண் 31, தாசில்சீனிவாசபுரம், வாா்டு எண் 43, பெரியதோட்டம், குடிமங்கலம் வட்டத்தில் அமந்தகடவு, புதுப்பாளையம், காங்கயம் வட்டத்தில் சிவன்மலை, பழையகோட்டை ஆகிய 21 இடங்களில் சிறு மருத்துவமனைகள் திறக்கப்படவுள்ளன.

இதில், மருத்துவ அலுவலா், செவிலியா், மருத்துவப்பணியாளா் என 3 பேருடன் ஊரகப் பகுதிகளில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும், நகா்ப்புற பகுதிகளில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் செயல்படும்.

7 சிறு மருத்துவமனைகள் இன்று திறப்பு :

திருப்பூா் மாவட்டத்தில் புதுப்பாளையம், தொட்டம்பட்டி, ஆமந்தகடவு, சின்னவீரம்பட்டி, சிவன்மலை, பழையகோட்டை, வேலப்பநாயக்கன்வலசு ஆகிய இடங்களில் 7 சிறு மருத்துவமனைகளை தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை திறந்துவைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →