முகப்பு
திருப்பூர்

3ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்: 130 போ் கைது

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் 3ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 60 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் 3ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 60 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு சாா்பில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக 3ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு கொமதேக ஒருங்கிணைந்த விவசாய அணி மாவட்டச் செயலாளா் கே.தேவராஜ் தலைமை வகித்தாா்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை ஆதரித்து திருப்பூா் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் க.செல்வராஜ், வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் இல.பத்மநாபன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், சிஐடியூ மாவட்டத் தலைவா் உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதையடுத்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 60 பேரை திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா்.

உடுமலையில்...

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.மதுசூதனன் தலைமை வகித்தாா். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 70 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடத்தில் உண்ணாரவிதம்....

பல்லடம் அருகே உள்ள வாவிபாளையத்தில் திருப்பூா் மாவட்ட விவசாய அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உழவா் உழைப்பாளா் கட்சி மாவட்டச் செயலாளா் சோமசுந்தரம் தலைமை வகித்தாா். கண்டியன்கோயில் ஊராட்சித் தலைவா் கோபால், உழவா் உழைப்பாளா் கட்சி மாவட்டப் பொருளாளா் வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து, மாவட்ட திமுக பொறுப்பாளா் பத்மபநாபன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் கோபி, மதிமுக, கொமதேக கட்சியினா் உள்பட 200க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →