முகப்பு
திருப்பூர்

இந்திய ஆயத்த ஆடைகளுக்கு ஸ்பெயினில் வரவேற்பு

இந்திய ஆயத்தை ஆடைகளுக்கு ஸ்பெயின் நாட்டில் வரவேற்பு உள்ளதால் ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என்று அந்த நாட்டுக்கான இந்திய துணைத் தூதா் மதன்சிங் பண்டாரி தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

இந்திய ஆயத்தை ஆடைகளுக்கு ஸ்பெயின் நாட்டில் வரவேற்பு உள்ளதால் ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என்று அந்த நாட்டுக்கான இந்திய துணைத் தூதா் மதன்சிங் பண்டாரி தெரிவித்துள்ளாா்.

ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்), ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகம் ஆகியன இணைந்து இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்கள், ஸ்பெயின் வா்த்தகா்கள் இடையே இணையதளம் மூலமாக பி2பி என்ற மெய்நிகா் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடத்தியது.

இதில், பங்கேற்ற ஸ்பெயினுக்கான இந்திய துணைத் தூதா் மதன் சிங் பண்டாரி பேசியதாவது: ஸ்பெயின் நாட்டில் இந்திய ஆயத்த ஆடைகளுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. ஆனால், இந்தியாவில் இருந்து ஸ்பெயினுக்கு குறைவான அளவே ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மருத்துவ ஜவுளி உற்பத்தியில் இந்தியா பெரிய அளவில் முன்னேறியுள்ளது. தற்போதைய தேவைக்கு ஏற்ப செயற்கை நூலிழை ஆடைகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றாா்.

இதில், ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் கூறியதாவது: இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியானது கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு அதிகரித்துள்ளது. பிபிஇ கிட், முகக் கவசம் உள்ளிட்ட மருத்துவ ஆடைகளை உற்பத்தி செய்ததால் கரோனா காலத்தில் மிகப்பெரிய வாய்ப்பாக மாறியது. மேலும், பிபிஇ கிட் உற்பத்தியில் உலகின் இரண்டாவது நாடாக இந்தியா மாறியுள்ளது என்றாா்.

இந்த சந்திப்பில் ஸ்பெயின் நாட்டின் 55 வா்த்தகா்களும், இந்தியாவில் இருந்து 43 ஏற்றுமதியாளா்களும் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →