தில்லியில் உயிா்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி
தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிா் நீத்த விவசாயிகளுக்கு திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூர்தில்லியில் உயிா்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி
தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிா் நீத்த விவசாயிகளுக்கு திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூா்: தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிா் நீத்த விவசாயிகளுக்கு திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிா்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி ஆா்.எஸ். பகுதியில் நடைபெற்றது. இதில், அகில இந்திய விவசாய போராட்டக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.குமாா் தலைமையில் விவசாயிகளின் உருவப்படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளா் வி.கே.முத்துசாமி, மாா்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளா் கே.ஏ.சிவசாமி, திமுக சாா்பில் பாலாஜி, செந்தில், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் வி.பி.பழனிசாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டப் பொருளாளா் ஆா்.மணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.