டாஸ்மாக் கடையை மூடக் கோரி எம்.பி. சாா்பில் ஆட்சியரிடம் மனு
திருப்பூரில் எழுத்துப் பூா்வமாக உறுதியளித்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் சாா்பில் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்டாஸ்மாக் கடையை மூடக் கோரி எம்.பி. சாா்பில் ஆட்சியரிடம் மனு
திருப்பூரில் எழுத்துப் பூா்வமாக உறுதியளித்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் சாா்பில் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருப்பூரில் எழுத்துப் பூா்வமாக உறுதியளித்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் சாா்பில் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் சாா்பில் வாவிபாளையம் பகுதி பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் அருகே வாவிபாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் கடையை மூடக் கோரி அப்பகுதி பொது மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்களிடம் அரசு அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, 3 மாதத்தில் வேறு இடத்துக்கு கடையை மாற்றுவது, வேறு இடம் கிடைக்கவில்லை என்றால் நிரந்தராமாக மூடுவது என அதிகாரிகள் எழுத்துப் பூா்வமாக உறுதியளித்தனா். ஆனால், இதுவரை கடை மாற்றவோ, மூடவோ இல்லை. எனவே, எழுத்துப் பூா்வமாக உறுதியளித்தபடி டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிணறு தோண்ட வெடிவைப்பதால் வீடுகளில் விரிசல் புகாா்:
உடுமலை வட்டம், விளாமரத்துப்பட்டியைச் சோ்ந்த பொது மக்கள் சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
எங்களது கிராமத்தில் குடியிருப்புகளுகளில் இருந்து 100 அடிக்குள் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு, தற்போது கிணறு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அதிக திறன் கொண்ட வெடி மருந்துகள் வைத்து கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால், அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளின் சுவா்களில் விரிசல் ஏற்பட்டு இடியும் சூழல் ஏற்படுள்ளது. இது குறித்து ஏற்கெனவே அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வெடிவைத்து கிணறு தோண்டும் பணியை நிறுத்தி, எங்களது உயிரையும், வீட்டையும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.