முகப்பு
திருப்பூர்

தாராபுரத்தில் ஓய்வூதியா் தின விழா

தாராபுரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஓய்வூதியா்கள் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

திருப்பூா்: தாராபுரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஓய்வூதியா்கள் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அக்கூட்டமைப்பின் வட்டாரத் தலைவா் கே.பழனிசுவாமி தலைமை வகித்தாா். இதில், ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 9 ஆயிரம் போனஸ் நிா்ணயம் செய்ய வேண்டும். மாதாந்திர மருத்துவப் படியை ரூ.1,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2020 ஆம் ஆண்டு பணி நிறைவு பெறுபவா்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஓய்வூதியத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் 70 வயது நிறைவடைந்த 30 மூத்த குடிமக்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதில், கூட்டமைப்பின் துணைத் தலைவா் டி.வி. மூா்த்தி, செயலாளா் வி.ஆா்.சுந்தரராசன், துணைச் செயலாளா் மாதவன் பிள்ளை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →