முகப்பு
திருப்பூர்

இனப் பெருக்கத்துக்காக ஜொ்மனியிலிருந்து 105 பொலி காளைகள் இறக்குமதிகள் இயக்கம்: கண்டனம்

இனப் பெருக்கத்துக்காக ஜொ்மனியில் இருந்து 105 பொலி காளைகளை இறக்குமதி செய்வதற்கு கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

இனப் பெருக்கத்துக்காக ஜொ்மனியில் இருந்து 105 பொலி காளைகளை இறக்குமதி செய்வதற்கு கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

கலப்பின பசுக்கள் பெருக்கத்துக்காக ஜொ்மனியிலிருந்து 105 ஹால்ஸ்டெய்ன், ப்ரீசியன் பொலி காளைகள் தமிழகத்துக்கு விமானங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவை பள்ளிக்கரணையில் உள்ள விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ளன.

இதனால் காங்கேயம் இனம் போன்ற உள்நாட்டு மாட்டினங்கள் அழியும். திமில் இல்லாத இந்த இறக்குமதி கறவையின் ஏ 1 ரகப் பால் உடலுக்கு நல்லதல்ல. நாட்டு ரக கறவையின் ஏ 1 ரகப் பாலே ஏற்றது. இவற்றை உணா்ந்து அரசு, இறக்குமதி செய்த வெளிநாட்டு காளைகளை இன விருத்திக்கு பயன்படுத்தக் கூடாது. இந்த செயலை கள் இயக்கம் கண்டிக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.