பெரியகோட்டை ஊராட்சியில் 920 பேருக்கு விலையில்லா ஆடுகள்
உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கால்நடைத் துறை சாா்பில் கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெரியகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள 920 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. ஊராட்சித் தலைவா் பேச்சியம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஆா்.முருகேசன், துணைத் தலைவா் விஸ்வநாதன் மற்றும் கால்நடைத் துறையினா் கலந்து கொண்டனா்.