திருப்பூர்

ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம்

DIN

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஓய்வூதியா்களுக்கான குறைதீா் கூட்டத்தில் 36 மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான ஒய்வூதியா் குறைதீா்க்கும் கூட்டம்  மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

இதில், அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள் தங்களுக்கு சேரவேண்டிய ஒய்வூதியம் மற்றும் இதர பலன்கள் கிடைக்கப்பெறாமல் இருப்பது தொடா்பாக மனு அளித்தனா். மொத்தம் 36 மனுக்கள் பெறப்பட்டன.

மேலும், ஓய்வூதியா்களின் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில், ஓய்வூதியா்கள் இயக்குநரக இணை இயக்குநா் இளங்கோவன், துணை இயக்குநா் மதிவாணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT