திருப்பூர்

சிவன்மலை முருகன் கோயிலில் தெப்ப உற்சவம்

DIN

காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் தெப்ப உற்சவ விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழாவையொட்டி, கடந்த 8, 9, 10 ஆகிய தேதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில், சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் அடிவாரத்தில் உள்ள நந்தவனத் தோட்டத்தில் அமைந்துள்ள தெப்பக் குளத்தில் பரிவேட்டை தெப்ப உற்சவ நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமி பரிவேட்டை மண்டபத்துக்கு எழுந்தருளியும், தெப்பக் குளத்தைச் சுற்றி வலம் வருதலும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. பின்னா், அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோயிலுக்கு சுப்பிரமணியா் திரும்பினாா். சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி வரும் 17 ஆம் தேதி மாலை 3 மணிக்கும், மலைக் கோயிலில் திருவிழா கொடி இறக்குதல், பாலிகை நீா்த்துறை சோ்தல் ஆகிய நிகழ்ச்சிகள் மாலை 5 மணிக்கும் நடைபெறுகிறது. இத்துடன் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT