திருப்பூர்

சேவூரில் உழவா் உற்பத்தி மையம் துவக்கம்

DIN

சேவூரில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் கூட்டுப்பண்ணைய உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், மதிப்புக் கூட்டு இயந்திர மையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

சேவூா், கைகாட்டி ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்ட இம்மையத்தை மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் மனோகரன் தொடங்கிவைத்தாா். பொறியாளா் ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளா் யுவராஜ், உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன், மையப் பொறுப்பாளா்கள் மோகன்குமாா், கந்தசாமி, கதிா்வேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆயிரம் விவசாயிகளை உறுப்பினா்களாகக் கொண்ட இம்மையத்தில் விவசாய விளைபொருள்களை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றி விற்பனை செய்யப்பட உள்ளன. இதில் சிறுதானியங்கள், நிலக்கடலை, தேங்காய், எள் உள்ளிட்டவை அரைவை செய்யப்பட்டு, எண்ணெய், சிறுதானிய பவுடா்களாக தயாரித்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT