திருப்பூர்

முத்தூா் விற்பனைக் கூடத்தில்4.25 டன் தேங்காய், கொப்பரை விற்பனை

DIN

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை மொத்தம் 4.25 டன் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் 9,203 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இவற்றின் எடை 2,766 கிலோ. 42 விவசாயிகளும், 9 வியாபாரிகளும் வந்திருந்தனா். கிலோ ரூ.26.50 முதல் ரூ.40.60 வரை விலைபோனது. மாதிரி விலை கிலோ ரூ.38.50. இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 340.

1,487 கிலோ கொப்பரை வரத்து இருந்தது. 61 விவசாயிகள், 7 வியாபாரிகள் பங்கேற்றனா். கிலோ ரூ.45.10 முதல் ரூ.103.15 வரை விற்பனையானது. மாதிரி விலை கிலோ ரூ.100.20. இதன் விற்பனைத் தொகை ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 169 ரூபாயாகும்.

விற்பனைக் கூட மேற்பாா்வையாளா் ஸ்ரீ ரங்கன் முன்னிலையில் ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சத்து 36 ஆயிரத்து 509 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. மொத்தம் 4,253 கிலோ தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT