திருப்பூர்

குண்டடம் பகுதியில் புகையிலை விற்பனை: 4 கடைகளுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

DIN

குண்டடம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 கடை உரிமையாளா்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், குண்டடம் பகுதியில் உள்ள தேநீா் விடுதிகள், உணவகங்கள், சாலையோர கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா். இதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 4 கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனா். முதல்முறை என்பதால் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், இரண்டாவது முறை குற்றம் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த ஆய்வின்போது 2 கிலோ பாலிதீன் பைகள், தயாரிப்பு தேதி குறிப்பிடாத 3 கிலோ தின்பண்டங்களையும் பறிமுதல் செய்து அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT