திருப்பூர்

காங்கயம் ஏடிஎம்-மில் கேட்பாரற்றுக் கிடந்த பணம்: வங்கியில் ஒப்படைத்த போலீஸ்காரர்

DIN

காங்கயம்: காங்கயத்தில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 2000 ரூபாயை காங்கயம் காவலர் ஒருவர் வங்கியில் ஒப்படைத்துள்ளார்.

காங்கயம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் சரவணன். இவர் செவ்வாய்க்கிழமை காலை காங்கயம் நகரம், கோவை சாலை, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் யாரோ வாடிக்கையாளர் எடுக்காமல் விட்டுச் சென்ற பணம் ரூ.2000 அப்படியே இருந்துள்ளது.

நான்கு ஐநூறு ரூபாய் தாள்கள் கொண்ட அந்தப் பணத்தை எடுத்த காவலர் சரவணன், காங்கயம் பேருந்து நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளரிடம் ஒப்படைத்துள்ளார். காவலரின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்த வங்கி நிர்வாகிகள், நெட்வொர்க் பிரச்னையின் காரணமாக பணத்தை யாரோ எடுக்காமல் விட்டுச் சென்றுள்ளனர். விசாரணைக்குப் பின்னர் பணம் உரியவரின் கணக்கில் சேர்க்கப்படும் எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT