கடமைக்காக உயிர் துறந்த காவலர்: காங்கேயத்தில் பயங்கரம்
காங்கேயத்தில் லாரி மோதியதில் காவலர் மரணமடைந்தார்.
காங்கேயத்தில் லாரி மோதியதில் காவலர் மரணமடைந்தார்.
காங்கேயம் அருகே திட்டுப்பாறையில் காவல்துறையினரின் கரோனா தடுப்பு சோதனைச் சாவடி உள்ளது. அவ்வழியே வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தி ஆய்வு செய்யப்படுகின்றன.
இந்நிலையில் வழக்கமான பாதுகாப்பு பணி நடைபெற்றுக்கொண்டிருந்த போது, ஒரு கண்டெய்னர் லாரி அசுர வேகத்தில் சாலையில் மற்றவர்கள் மீது மோதுவது போல வந்தது. பணியிலிருந்த காவலர் பிரபு அதனைத் தடுத்துநிறுத்த முயன்றபோது லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.