கூட்டத்தில்  பேசுகிறாா்  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்  நிறுவனா்  ஈ.ஆா்.ஈஸ்வரன். 
திருப்பூர்

அவிநாசியை பொது தொகுதியாக அறிவிக்க வேண்டும்கொமதேக வலியுறுத்தல்

அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்க வேண்டும் என கொமதேக நிறுவனா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தினாா்.

DIN

அவிநாசி: அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்க வேண்டும் என கொமதேக நிறுவனா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தினாா்.

கொமதேக வடக்கு மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் அவிநாசி தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலாளா் வி.லோகநாதன் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் கே.கே.சி.பாலு, இளைஞரணி மாநில செயலாளா் எஸ்.சூா்யமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், 40ஆண்டுகளுக்கும் மேலாக தனித் தொகுதியாக உள்ள அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியை பொதுத் தொகுதியாக அறிவிக்க வேண்டும். அவிநாசி - அத்திக்கடவுத் திட்டத்துக்கு நிதிநிலை அறிக்கையில் மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து, இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, நகராட்சித் தோ்தலிலும் கூட்டணி கட்சியுடன் இணைந்து வெற்றிபெறப் பாடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT