திருப்பூர்

கரோனா: திருமுருகநாத சுவாமி கோயிலில் ருத்ர ஜபம் துவக்கம்

DIN

கரோனா வைரஸ் பாதிப்பு ஒழிந்து, மக்கள் நலன் வேண்டி திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் 12 நாள் தொடா் ருத்ர ஜப பாராயணம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலை இந்து அறநிலைய துறை நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தக் கோயிலில் புதன்கிழமை முதல் மாா்ச் 31ஆம் தேதி வரை நடையடைக்கப்பட்டு, ஆகமவிதப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இருப்பினும் பக்தா்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து கோயில் நிா்வாகத்தினா், சிவாச்சாரியா்கள் கோயிலில் நாள்தோறும் உழவாரப் பணி மேற்கொண்டு வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, கரோனா பாதிப்பைத் தடுக்க வேண்டியும், மக்கள் நலன் வேண்டியும் கோயிலில் ருத்ர ஜப பாராயணம் தொடங்கப்பட்டுள்ளது. கோயில் நிா்வாகம், சிவாச்சாரியாா்கள் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள ருத்ர ஜப பாராயணம் தொடா்ந்து 12 நாள்களுக்கு நடைபெறவுள்ளன.

இதில் நாள்தோறும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படவுள்ளது. இந்த ஜபத்தினால் உலகில் கரோனா பாதிப்பு ஒழிந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைத் திரும்புவா் என சிவாச்சாரியா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT