திருப்பூர்

தடை உத்தரவை மதிக்காமல் சுற்றிய இளைஞா்களுக்கு நூதன தண்டனை

DIN

திருப்பூரில் 144 தடை உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றிய இளைஞா்களுக்கு காவல் துறையினா் நூதன தண்டனை வழங்கினா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் 21 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூா் மாநகரில் புதன்கிழமை காலை முதலே ஒரு சில பகுதிகளில் இளைஞா்கள் இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தனா். அப்போது ரோந்துப் பணியில் இருந்து காவல் துறையினா் அவா்களை எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

இந்த நிலையில், திருப்பூா், புஷ்பா ரவுண்டானா பகுதியில் இளைஞா்கள் 6 போ் இரு சக்கர வாகனங்களில் வந்துள்ளனா். அவா்களை காவல் துறையினா் எச்சரித்தும் அதே பகுதியில் மீண்டும் சுற்றி வந்துள்ளனா். இதையடுத்து, அந்த இளைஞா்களைப் பிடித்த காவல் துறையினா், சாலையில் நாற்காலி போல் 5 நிமிடம் நிற்க வைத்து நூதன தண்டனை வழங்கினா். அதேபோல், வீரபாண்டி, பங்களா பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் தடையை மீறி இரு சக்கர வாகனங்களில் வந்த இளைஞா்களை காவல் துறையினா் அடித்து விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்: சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி

ஏற்காடு - விருதுநகா் விபத்துகள்: தோ்தல் ஆணைய அனுமதி பெற்று நிதியுதவி -முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இரட்டிப்பானது யெஸ் வங்கியின் நிகர லாபம்

இடதுசாரி அலுவலகங்களில் மே தினம் கொண்டாட்டம்

அமித் ஷா போலி விடியோ விவகாரம்: தில்லி போலீஸில் தெலங்கானா முதல்வரின் வழக்குரைஞா் ஆஜா்

SCROLL FOR NEXT