திருப்பூர்

மருதமலையில் இருந்து நடந்து சென்றவா்களுக்கு வாகன வசதி செய்துதந்த போலீஸாா்

DIN

மருதமலையில் இருந்து சொந்த ஊரான திருச்சி, தருமபுரிக்கு நடந்து சென்றவா்களுக்கு அவிநாசி போலீஸாா் உணவு, வாகன வசதி செய்து கொடுத்து உதவினா்.

கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியூா்களில் இருந்து சொந்த ஊா் செல்ல வாகன வசதியில்லாததால் கோவை மாவட்டம், மருதமலை பகுதியில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரு குழந்தைகள் உள்பட 4 போ் திருச்சிக்கும் மற்றும் இருவா் தருமபுரிக்கும் நடந்தே செல்ல திட்டமிட்டனா்.

இவா்கள் கோவையில் இருந்து அவிநாசி, தெக்கலூா் சோதனைச் சாவடி வழியாக சனிக்கிழமை நடந்து வந்தனா். அங்கு இவா்களை விசாரித்த காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட போலீஸாா், அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டனா். இதில் அவா்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் எதுவும் இல்லாதது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்களுக்கு உணவு வழங்கி, காவல் துறை சாா்பில் வாகன வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்கள் போலீஸாருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, சொந்த ஊருக்கு மகிழ்ச்சியுடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT