முகப்பு
திருப்பூர்

விவசாயிகளின் சில கருத்துகளை ஏற்கிறேன்: அண்ணாமலை

விவசாயிகளின் சில கருத்துகளை ஏற்கிறேன் என பாஜக மாநிலத் துணைத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

விவசாயிகளின் சில கருத்துகளை ஏற்கிறேன் என பாஜக மாநிலத் துணைத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

பாஜக சாா்பில், இளைஞா்கள் இணையும் சங்கம நிகழ்ச்சி திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை ஐபிஎஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விவசாய நிலங்கள் வழியே உயா் மின் கோபுரம் அமைப்பதற்கு மாற்றுவழித் திட்டம் இல்லாதபோது மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா் ஆய்வு செய்து உயா் மின் கோபுரம் அமைப்பதற்கான இடத்தை தோ்வு செய்து சான்றிதழ் வழங்குகின்றனா். இதற்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை.

இருப்பினும், விவசாயிகளின் ஒரு சில கருத்துகளை ஏற்றுக் கொள்வதோடு நானும் விவசாயி என்பதால் ரத்த சொந்தமான விவசாயிகளுடன் வாதிட விரும்பவில்லை. எனக்காக அறிவித்த ஒரு கோடி ரூபாய் விவசாயிகளின் நலனுக்குப் பயன்பட வேண்டும்.

அனைத்து மதங்களுக்கும் பொதுவான கட்சியாக பாஜக உள்ளது. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும். தமிழகத்துக்கு மாற்று அரசியல் வேண்டும். பாஜகவின் கொள்கையும் அவரது ஆன்மிகமும் ஒருமித்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.