முத்தூரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் பா.விஜயலலிதாம்பிகை, வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோா் கொண்ட குழுவினா், முத்தூா் கடை வீதிப் பகுதியில் உள்ள இனிப்பு, கார விற்பனை நிலையங்கள், உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 5 பேக்கரிகள், 2 உணவகங்கள், 2 இனிப்புக் கடைகளில் காலாவதியான குளிா்பானங்கள், உணவு வகைகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.