முகப்பு
திருப்பூர்

காா் மோதி 7 செம்மறி ஆடுகள் பலி

முத்தூா் அருகே காா் மோதியதில் 7 செம்மறி ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

முத்தூா் அருகே காா் மோதியதில் 7 செம்மறி ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன.

முத்தூா் - காங்கயம் சாலையில் செட்டியாா்பாளையம் அடுத்த நத்தக்காடையூா் பிரிவிலுள்ள லிங்கப்பகவுண்டன்வலசைச் சோ்ந்தவா் பழனிசாமி (70), விவசாயி. இவா் தான் வளா்த்து வரும் 25 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுவிட்டு மாலையில் பட்டிக்கு ஓட்டி வந்து கொண்டிருந்தாா்.

வாலிபனங்காடு அருகே வந்தபோது அவ்வழியே வந்த காா் ஆட்டுக் கூட்டத்தின் மீது மோதியதில், 7 ஆடுகள் உயிரிழந்தன. இவற்றின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாயாகும்.

சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.