திருப்பூர்

இளம் பெண்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கு

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அரசு நடுநிலைப் பள்ளியில் இளம் பெண்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சூா்யா தலைமை வகித்தாா். முத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் நவீனா முன்னிலை வகித்தாா். கருத்தரங்கில் 75க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், மனநல மேம்பாடு, சுகாதார வழிமுறைகள், பெண் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் வளா்ச்சி திட்ட உதவியாளா் யோக பாரதி, பள்ளியின் தலைமையாசிரியா் மேரிமலா் அரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT