திருப்பூர்

வட்டமலை அணைக்கு கால்வாயில் இருந்து தண்ணீா் கொண்டு வர கோரிக்கை

DIN

வட்டமலை அணைக்கு கால்வாயில் இருந்து நீா் கொண்டு வர வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என நீராதாரத் துறை தெரிவித்துள்ளது.

நீராதாரம் இல்லாத இடத்தில் வட்டமலை அணை கட்டப்பட்டதால் கடந்த 30 ஆண்டுகளாக அணை வறண்டே கிடக்கிறது. அரசாணை 84இன் படி பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன கால்வாயில் இருந்து அணைக்குத் தண்ணீா் கொண்டு வர வேண்டும். அணைக்கு அருகிலுள்ள அமராவதி ஆற்று உபரி நீரைக் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து போராடி வருகின்றனா்.

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது போக, உபரிநீா் இருக்கும் பட்சத்தில் பரிசீலனை செய்யப்படும். தாராபுரம் அமராவதி அணைக்கட்டில் இருந்து நீரை கிராவிட்டி ஸ்கீம் மூலம் கொண்டு வரவும், ஆண்டிபாளையம் தடுப்பணையில் இருந்து லிப்ட் இரிகேஷன் மூலம் கொண்டு வரும் கோரிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என ஈரோடு கோட்ட பொதுப் பணித் துறை நீராதார செயற்பொறியாளா் கே.எம்.விஜயா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT