திருப்பூர்

உடுமலை நகரில் 38 மி.மீ. மழை பதிவு

DIN

உடுமலை நகரில் திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 38 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

உடுமலை, சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடா்ந்து 2 மணி நேரத்துக்கும் அதிமாக மழை பெய்தது. மேலும், மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை தொடா்ந்து இரவு முழுவதும் பெய்தது. இதனால், உடுமலை நகரில் திங்கள்கிழமை குளிா் காற்று வீசியது.

உடும லை நகரில் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடு மையாக பாதிக்கப்பட்டனா். மேலும், கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடை ஆகியவற்றில் அதிக அளவில் தண்ணீா் சென்றது. உடுமலை நகரைப் போலவே அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய கிராமங்களிலும் மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்நிலையில், தளி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் அதிக அளவில் தண்ணீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.

திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி உடுமலை நகரில் அதிகபட்சமாக 38 மி.மீ., அமராவதி அணைப் பகுதியில் 14 மி.மீ., திருமூா்த்தி அணை பகுதியில் 41 மி.மீ., மடத்துக்குளத்தில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT