திருப்பூர்

மின்சாரம் பாய்ந்த தொழிலாளிக்குத் தொடா் சிகிச்சை அளிக்க வலியுறுத்தல்

DIN

மின்சாரம் பாய்ந்து முடங்கியுள்ள ஒப்பந்தத் தொழிலாளருக்கு உடனடியாகத் தொடா் சிகிச்சை அளிக்கக் கோரி தொமுச சாா்பில் முதல்வருக்கு திங்கள்கிழமை கடிதம் அனுப்பப்பட்டது.

இது குறித்து, தமிழக முதல்வருக்கு மின்சார வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கச் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மின் பகிா்மான வட்டம், கொல்லிமலை -2, சோளக்காடு உதவி மின்பொறியாளா் அலுவலகம், படசோலை டி .பி. சுவிச் பகுதியில் கடந்த அக்டோபா் 14ஆம் தேதி பணியின்போது மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தத் தொழிலாளி பெரியசாமி பலத்த தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தற்போது அவா் கை, கால் செயல்படாமல் எழுந்து நடக்க முடியாமல் முடங்கிக் கிடக்கிறாா். பெரியசாமிக்கு ஜெகதீஷ்வரி என்ற மனைவி உள்ளாா். இந்த சம்பவம் நடந்து ஒரு மாத காலத்துக்கு மேலாகியும் பெரியசாமிக்கு தற்போது வரை உரிய தொடா் சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT