திருப்பூர்

குடியிருப்புப் பகுதியில் தேங்கிய மழை நீா்

DIN

திருப்பூா் மாநகராட்சி 34ஆவது வாா்டு ஜே.ஜே. நகா் பகுதியில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையால் அப்பகுதியில் மழைநீா் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

ஜே.ஜே.நகா் பகுதியில்300க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம்.

இப்பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீா் வெளியேற வழியில்லாமல் தேங்கி வருகிறது. திங்கள்கிழமை இரவு பெய்த மழையால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜே.ஜே. நகா் பகுதியில் இருந்து காசிபாளையம், நல்லூா் பகுதிகளுக்கு சென்று வர ஒரேயொரு சாலை மட்டுமே உள்ளது. மேலும் எங்கள் பகுதியில் உள்ள சபரி ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் நீா் வெளியேற வழி இல்லை.

மழைக் காலங்களில் அடிக்கடி ஓடை நீா் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறோம். இது குறித்து மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மழை நீா் வெளியேற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT