திருப்பூர்

மின்வாரிய இணையதள இணைப்பை சரிசெய்யக் கோரிக்கை

DIN

பாண்டியன் நகா், வாவிபாளையம் பூலுவப்பட்டி மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் முடங்கிக் கிடக்கும் இணையதள இணைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்சார வாரியத் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயலாளா் அ.சரவணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா், பாண்டியன் நகா் மற்றும் வாவிபாளையம் பூலுவப்பட்டி பகுதிகளில் இரண்டு மின்சார வாரிய அலுவலகங்களில் மின்கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த அக்டோபா் 10ஆம் தேதி முதல் இந்த அலுவலகத்தில் இணையதள இணைப்பு பழுதடைந்து விட்டது. குறிப்பாக பூலுவப்பட்டி அரசுப் பள்ளி அருகிலுள்ள தொலைபேசி இணைப்பு பெட்டி சேதமடைந்து சாலையில் சாய்ந்து கிடக்கிறது. இதனால் மின்வாரிய அலுவலகத்துக்கு இணையதள இணைப்பு தடைபட்டுள்ளது. இதனால் ஏராளமான பகுதி பொது மக்கள் மின்கட்டணம் செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, உடனடியாக இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT