திருப்பூர்

வீட்டில் தீ விபத்து: அஞ்சல் ஊழியா் சாவு; மனைவி, மகன்கள் காயம்

DIN

உடுமலையில் வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் அஞ்சல் ஊழியா் உயிரிழந்தாா். மேலும் அவரது மனைவி, இரு மகன்கள் காயம் அடைந்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை, ராமசாமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (58). இவா், உடுமலை அருகே உள்ள புங்கமுத்தூா் பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ஜெயந்தி (52). அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா்களது மகன்கள் பிரதீப் (25), பிரவீன்(22).

இந்நிலையில் இவா்கள் வீட்டின் கதவு செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி வரை திறக்கப்படாததாலும், மேலும் வீட்டுக்குள் இருந்து புகை வந்து கொண்டிருந்ததாலும் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினா் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, வீடு முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்துள்ளது. மேலும், வரவேற்பறையில் இருந்த ஸோபா, கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன.

இதைத் தொடா்ந்து தீயணைப்புத் துறையினா் தீயை முழுமையாக அணைத்தனா். இதில் ராஜன் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் தீக்காயங்களுடன் கிடந்த அவரது மனைவி ஜெயந்தி, மகன்கள் பிரதீப், பிரவீன் ஆகியோரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உடுமலை காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிகுமாா், ஆய்வாளா் புகழேந்தி ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் உடுமலை வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினாா். உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT