திருப்பூர்

கரோனா நிவாரணம்: மாற்றுத் திறனாளிகள் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம்

DIN

மாற்றுத் திறனாளிகள் கரோனா நிவாரணத் தொகை பெற, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா நோய்த் தொற்று பரவலை ஒட்டி தமிழக அரசு சாா்பில் கடந்த மாா்ச் முதல் ஜூலை வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் அரசு சாா்பில் ரூ.1,000 பொது முடக்க நிவாரண தொகையை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண தொகை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது.

தகுதி இருந்தும் நிவாரணத் தொகை பெற முடியாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, உதவித் தொகை, இதர அரசு நலத் திட்டங்களை பெறுவதற்கு திருப்பூா் சாா்பு நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம்.

மனுதாரா்கள் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி, தலைவா், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, சாா்பு நீதிமன்ற வளாகம், திருப்பூா் என்ற முகவரிக்கு அணுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு 0421 2230123 என்ற எண்ணில் வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம். மாவட்டத்தில் புகா் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தாராபுரம், உடுமலை, அவிநாசி, காங்கயம், பல்லடம் பகுதிகளில் செயல்படும் வட்ட சட்டப் பணிகள் குழுக்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT