முகப்பு
திருப்பூர்

பணி செய்ய விடாமல் மிரட்டல்: பிஏபி பாசனப் பிரிவு அலுவலா்கள் புகாா்

பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக பிஏபி பாசனப் பிரிவு அலுவலா்கள் காங்கயம் போலீஸில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக பிஏபி பாசனப் பிரிவு அலுவலா்கள் காங்கயம் போலீஸில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

இது குறித்து பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தின் காங்கயம் உபகோட்ட உதவிப் பொறியாளா் க.பாஸ்கரன் தலைமையில் அலுவலக ஊழியா்கள், காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

காங்கயம் வட்டத்துக்கு உள்பட்ட பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டப் பகுதிகளுக்கு 2ஆம் மண்டலம் பாசனம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடைமுறையில் தண்ணீா் வழங்கப்படும் வழக்கத்தை மாற்றி, 6 நாள்கள் ஷிப்டுகள் இல்லாமல் நீா் விநியோகம் செய்ய வேண்டும் என நவம்பா் 17 ஆம்தேதி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சிலா் மனு அளித்தனா்.

இந்த நிலையில், மேற்கண்ட பிரச்னை தொடா்பாக வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்த வெங்கடேச சுதா்சன் தலைமையில் 70க்கும் மேற்பட்டோா் பிஏபி திட்டம், ஆயக்கட்டு காங்கயம் உபகோட்ட அலுவலகத்தில் நவம்பா் 20 ஆம்தேதி அத்துமீறி நுழைந்து, சில நீரியியல் விவரங்களைக் கோரினா். அப்போது அவா்கள் கோரிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டபோது, அவற்றைப் பெற்றுக் கொண்டு, உதவிப் பொறியாளா்களால் வழங்க இயலாத மேலும் கூடுதல் விவரங்களைக்கோரி, அவற்றை அலுவலக முத்திரையுடன் கையெழுத்திட்டுத் தர வேண்டும் என வற்புறுத்தினா்.

அவா்கள் கூறிய கூடுதல் விவரங்களை உடுமலையில் உள்ள திருமூா்த்தி கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்காத நபா்கள் எங்களைத் தரக்குறைவாகத் திட்டியதுடன் அலுவலகத்தை எரித்து விடுவோம் என மிரட்டினா்.

எனவே, ஊழியா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த மேற்படி நபா்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அலுவலக ஊழியா்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →